இரவுகள் எனக்கு விழித்திருக்க விதிக்கப்பட்டிருக்கின்றன
மானுடப் பிறவிகள் துயிலும் இரவுகள்
எனக்கு
பரந்து விரிந்த வெளிகளில்
அலைந்து திரிந்து இரைதேடும் காலம்
எந்தப் பரப்பிலும் தங்கிவிடாமல்
எந்தக் கட்டிலும் சேர்ந்துவிடாமல்
தனியாய்
தன்னந்தனியாய்
இரத்தச்சிவப்பேறி ஒளி வீசும் என் விழிகள்
விரிக்கும் வனங்களில்
இரைதேடி
வெறி கொண்டலையும் ஒநாய் நான்
சோர்வறியாது என் கால்கள்
தளராது என் தசைகள்
வற்றாது உமிழ்நீர் வடியும் என் நாவு
நெடுந்தூரம் வீசி நுகரும் என் நாசி
தந்தங்களையும் பிளந்துவிடும் என் பற்கள்
பிணங்களையும் என் இனத்தையும்
ஒருபோதும் நான் சுவைப்பதில்லை
வா!
09.05.03
பன்முகம் ஜூலை – செப், 2003 இதழில் வெளியானது
மறுமொழியொன்றை இடுங்கள்