கார்காலக் குறிப்புகள் … 6

இளைப்பாறவும் இடங்காணாமல்
உள்ளங்கால் சோர்ந்து திரும்பி வந்த
புறாவைக் கைநீட்டி தன்னிடத்தில் சேர்த்தவன்
எழுநாள் பொறுத்து திரும்பவும் பறக்கச் செய்தான்
ஒலிவமர இலையைக் கொத்திக்கொண்டு
அவனிடத்தில் வந்து சேர்ந்தது அது
பின்னும் ஏழுநாள் பொறுத்து
பேழையை விட்டுப் பறந்து திரும்பாமலே போனது
இருதயத்து நினைவுகளெல்லாம் பொல்லாததாகி
பூமியின்மேல் மாம்சமானதெல்லாம் சீர்கெட்டுப்போனதனால்
மனஸ்தாபங்கொண்ட தேவன்
சமுத்திரத்தின் மச்சங்களின்பால் பிரியங்கொண்டு
நாசியிலே சுவாசமுள்ளவையத்தனையும்
வெட்டாந்தரையிலே உண்டான அத்தனையும்
மாண்டுபோக
மகாஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்து
வானத்தின் மதகுகளைத் திறந்து
உண்டாக்கின ஜலப்பிரளயம்
வடிந்து வற்றிப்போனது
பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது
அப்பொழுது தேவன்
பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார்
இனி மாம்சமானவைகளெல்லாம்
ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்று
பூமியை அழிக்க இனி
ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்று
தன் வில்லெடுத்து மேகத்தில் வைத்து
உடன்படிகை செய்தார்
ஆனாலும் மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகளெல்லாம் சிறுவயதுமுதலே பொல்லாததாயிருந்தது
மாம்சமானதாயிருந்தது
என்றாலும் தேவன் தன் உடன்படிக்கை மீறாதிருந்தார்
ஜலப்பிரளயம் உண்டாக்காதிருந்தார்
பூமியின்மேல் மழை பெய்யாதிருக்கச் செய்தார்
மகாஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் வற்றிப்போகச் செய்தார்
வானத்தின் மதகுகளைத் தாழிட்டு இறுக மூடச்செய்தார்
மேகத்தின் மேல் வைத்த தன் வில்லும் பற்றிச்சென்றார்

21.09.03

மணல் பிரதி ஜனவரி 2004

Advertisements
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: