உலக அப்பாக்களுக்கு

அப்பாவை உதாரணமாக வைத்து
நல்ல பையன் என்று பேரெடுக்கச் செய்த
பிரயத்தனங்கள் அத்தனையும் வீணாகிப் போனபின்
சின்ன வயசிலிருந்தே எந்தப் பழக்கத்திற்கும் அடிமையாகாமல்
போனது இப்போ எத்தனை அபத்தமாகத் தோன்றுகிறது

பகிர்ந்துகொள்ள
இருந்த நட்புகள் ஒன்றிரண்டும்கூட
கல்யாணமாகி கால்கட்டுடன் ஒதுக்கமான பின்னால்
நான் காதலித்தவளும் என்னைக் காதலித்தவளும்
கிட்ட வராமலேயே முறித்துக்கொண்டுவிட்ட பின்னால்
ஆளில்லாமல்
தவிக்கிற நேரங்களில்
எந்தப் பழக்கமும் இல்லாமலிருப்பது எவ்வளவு சிரமமாயிருக்கிறது

தண்ணி அடித்து
சுவருக்கு முன்னால் உட்கார்ந்து
மனசில் இருப்பதையெல்லாம் கொட்டித்தீர்த்துவிடவோ
குறைந்தபட்சம்
கோணலான உதட்டில் ஒன்று சொருகி
பற்றவைத்து
புகையோடு சேர்த்து எல்லாத்தையும் ஊதித்தள்ளிவிடவோ
முடியாமலிருப்பது எவ்வளவு வேதனையாக இருக்கிறது

குடிப்பவன் பாக்கியவான்
கூத்தடிப்பவன் ஞானி
பார்த்து பொருமிக்கொண்டிருக்கிற நானோ
பேமானி

19.04.94

1996 அல்லது 97 என்று நினைக்கிறேன், கவிதாசரண் இதழில் வந்தது. இரண்டு முன்று வருடங்களுக்கு முன்னர் அவ்விதழின் ஆசிரியருடன் பேசிக் கொண்டிருந்தபோது இதை நினைவுகூர்ந்தேன். அக்கவிதையைப் படித்துவிட்டு, “ஏன் இந்தப் பெண்ணுக்கு இப்படியெல்லாம் விபரீதமான் ஆசை” என்று யோசித்ததாகச் சொன்னார். இப்போது வாசிக்கும்போது இது நல்ல கவிதைதானா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

என்றாலும், நேற்று “அப்பாக்களின் தினம்” என்று அறிந்தேன். அப்பாக்களுக்கு என் காணிக்கையாக இதை இங்கு தருகிறேன்.

Advertisements
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: