நண்பர்களுக்கு …

வலைப்பதிவில் நான் பதியத் தொடங்கியதன் நோக்கம் பிரபல்யம் ஆவதற்கோ, விவாதங்களைக் கிளப்புவதற்கோ அன்று. தமிழ் அறிவுச் சூழலில் மாற்று வாழ்வு, மாற்று அரசியல், இன்னும் இது போன்று ஆரோக்கியமாக நிகழத் தொடங்கிய சில உரையாடல்கள் விவாதங்களாக திசை திரும்பி, தனிப்பட்ட தாக்குதல்களாகவும் திரிந்ததை அவற்றை அக்கறையோடு கவனித்து வந்தவர்கள் உணர்வார்கள். அவற்றுள் சில காலம் நானும் சிக்கிச் சுழன்றதுண்டு.

இவை ஏன் இப்படித் திரிந்தன என்று குழம்பி, விடைதேடி சில காலம் அலைந்து திரிந்து, சில தெளிவுகளை அடைந்தபோது தமிழ்ச் சிற்றிதழ்களின் திசை முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. எனது தெளிவுகளைப் பகிர்ந்து கொள்ள சரியான களம் தேடி ஏமாற்றமே மிஞ்சியது.

இறுதியாக இதுவே சரியான களம் என்று முடிவு செய்து இங்கு அடியெடுத்து வைத்திருக்கிறேன். இங்கு விவாதம் எனது நோக்கம் அன்று. இதில் எழுதி சமூகத்தை மாற்றி விடும் நம்பிக்கையும் எனக்கில்லை.

சிற்றிதழ்களைவிட சற்றே விரிவான தளம். சற்றே விரிவான வாசகர் தளத்தை எட்ட முடியும். இங்கு பகிர்ந்து கொள்பவற்றிலிருந்து ஒரு சிறுவாசகர் தளம் மேற்கொண்டு தமது வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்ளக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பே இங்கு பதியக் காரணம்.

பொதுக் களத்தில் தனிக்களன். ப்ளாக் ஸ்பேஸ்கள் சாத்தியப்படுத்திருக்கும் புதிய வகையான பொதுத்தளம் இது. சமூக வெளியில் இருக்கும் பொதுத்தளத்திலிருந்து வித்தியாசமானது.

இதில் எனக்கான தனிக்களனிலிருந்து பொதுக்களனுக்கான சில கருத்துப் பகிர்வுகள். ஆகையால், கமெண்டுகள் என்ற பேரில் சமூகப் பொதுக்களனில் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற வெட்டி குதர்க்கக் கேள்விகளுக்கோ வலதுசாரிக் கருத்துக்களுக்கோ பதில்கள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கருதுகிறேன். அத்தகைய கமெண்டுகளை நீக்கி விடவும் முடிவுசெய்திருக்கிறேன்.

இதில் ஜனநாயகம் குறித்து சிலர் கேள்வி கேட்கக்கூடும். சத்தியமாகச் சொல்கிறேன் நான் ஜனநாயகவாதி அல்ல. ஜனநாயகம் என்று நாம் அறிந்து வைத்திருப்பதன் குறுகிய எல்லைகள் குறித்து கூடிய விரைவில் எழுத இருக்கிறேன். அது சில தெளிவுகளை உருவாக்கும்.

கடைசியாக, எனது புகைப்படம் குறித்து. தன்னடக்கம் குறித்து வாய்கிழியப் பேசுபவன் அல்ல நான். தன்னடக்கத்தில் எனக்கு நம்பிகையும் இல்லை. நானும் எனது ‘நானும்’ மறுக்க முடியாதவை. அது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களிலும் மற்றவர்களது நானையும் துருத்தாதவரையில் ஆரோக்கியமானது என்றும் நம்புகிறேன். தவிர எனக்கு கவித்திமிரிலும் மிகுந்த நம்பிக்கை உண்டு. இது என் களன். என் புகைப்படத்தைப் போட்டுக்கொள்ள எனக்கு முழு உரிமை உண்டு. பார்க்கப் பிடிக்காதவர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளலாம். அல்லது இப்பக்கத்திற்கு வருவதை நிறுத்திக்கொள்ளலாம்.

நன்றி.

Advertisements
Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: