வரம்

விதியை வளைத்து
வெல்லும் ஆசை எதுவும்
எனக்கில்லை
ஆரத்தழுவி – விலகி – மண்டியிட்டு
அதன் கரம் பற்றி இதழ் பதித்து
ஒரு முறுவல் விரித்து முகம் நோக்கி
நின்று
கரம் விரித்துக் காத்திருக்கிறேன்
சலனமற்ற அதன் விழிகளில் விரிவதென்னெ
அசைவற்றுப் பதிந்திருக்கும் இதழ்கள் சொல்வதென்னெ
எனக்கென்று அது பொதித்திருப்பதென்னெ
மரணமோ
தற்கொலையோ
பாழ்வெளியோ
தோல்வித் தொடர்ச் சங்கிலியோ
சீண்டுவாரில்லாமல் சிக்கிச் சீரழிவாய்
மனம் முறிந்து சடை வளர்த்து சீழ் பிடித்து
தெருப்பைத்தியமாய்த் திரிவாய்
ரோகம் துரத்துமுன்னை
கூன் விழுந்து கோலூன்றி
கழித்த நீர் கசியும் வட்டெடுத்து
சிதறும் சிறு பருக்கைக்குத் தவங்கிடப்பாய்
அநாதையே பதரே புழுவே
பூலோகம் பழிக்குமுன்னை
மேலோர் வெறுத்துதொதுக்குவார் உன்னை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் இப்புவியில் பேயாய் அலைவாய்
உன் பேர் சொல்லி
அழும் குழந்தையின் மூச்சடைப்பார்
இருள் இரவுகளில்
வழிவிலகிய பாதைகளில்
குலைநடுங்கும் உன் கதைகள் உலவும்
விமோசனமில்லை உனக்கு
மீண்டும் மீண்டும் அற்பப்பிறப்பபெடுப்பாய்
இம்மியும் மாறாது இதே சுழலில் உழல்வாய்
என்றதன் இதழ் விரித்து
முகம் மலர்ந்தொரு சாபமழையோ
முறுவல் மாறாது
கரம் விரித்து
காத்திருக்கிறேன்.

26.06.03

பன்முகம் ஜனவரி – மார்ச், 2004

Advertisements
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: