கவனிக்கவும்
கருப்பு மக்கள் கவனிக்கவும்
ஆண் பெண் குழந்தை எல்லா கருப்பு மக்களும் கவனிக்கவும்
எவர் எங்கே இருந்தாலும் கவனிக்கவும்
அவசரம், மறுமொழி பேசவும்
கருப்பு மக்கள் மறுமொழி பேசவும்
அவசரம், எவர் எங்கே இருந்தாலும் கவனிக்கவும்
எல்லா கருப்பு மக்களும் கவனிக்கவும்
எல்லா கருப்பு மக்களும் கவனிக்கவும், மறுமொழி பேசவும்
கருப்பு மக்கள் உடன் மறுமொழி பேசவும்
60 – களில் கருப்பு அழகியலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர். 70 – களில் கருப்புத் தேசிய இயக்கம் குறுகிய வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதாக விமர்சித்து மார்க்சியத்தை நோக்கி நகர்ந்தார். இவரது பெயர் மாற்றங்களே இவரது அரசியல் வளர்ச்சியை பிரதிபலிக்கும். பெற்றோர் இட்டது Everett Le Roy. கல்லூரிக் காலத்தில் டூலி ஜலூலிவு என்று (ஃபெரெஞ்சு வாடை வீச) மாற்றிக் கொண்டார். 60 – களில் கருப்புத் தேசிய இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டபோது Imam (spiritual leader) Ameer (blessed me) Baraka (prince) என்று இஸ்லாமியப் பெயரைச் சூட்டிக் கொண்டார். மார்க்சியத்தை நோக்கி நகர்ந்தபோது Imam என்பதை கழற்றிவிட்டார்.
SOS (Save Our Souls) என்பது தொடக்கத்தில், கப்பல்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளூபோது தரும் அவசரச் செய்தியாக இருந்தது. அமிரி பராகா சிறிது காலம் விமானப் படையில் பணியாற்றியவர்.
கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004
மறுமொழியொன்றை இடுங்கள்