கருப்பு சகோதரியே எப்போதும் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பது எதனால்?

அது எப்படி நடந்ததென்று தெரியுமா? உலகத்தையும் மனிதர்களையும் மற்ற உயிர்களையும் படைத்து முடித்ததும் கடவுள் ஒரு பெரிய மூட்டையைக் கட்டி தெருவில் நடுவழியில் அதைப் போட்டுவிட்டார். ஆயிரம் வருடங்கள் அது அங்கேயே கிடந்தது. அப்புறம் ஒருநாள் வயதான அந்த அம்மணி, அய்யாவிடம் சொன்னாள், “போய் அந்த மூட்டையை எடுத்து வா. அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.” வயதான அய்யா மூட்டையைப் பார்த்தார். ரொம்பவும் கனமாகத் தெரிந்தது. தன் கருப்பு அடிமையைக் கூப்பிட்டுச் சொன்னார், “போ, அங்கே தெருவில் கிடக்கிற அந்தப் பெரிய மூட்டையை எடுத்து வா.” அந்தக் கருப்பன் அந்த மூட்டையை பலமுறை பார்த்திருக்கிறான் அதனால் தன் மனைவியைக் கூப்பிட்டுச் சொன்னான்: “ஏய், போய் அந்த மூட்டையை எடுத்துவா.”

அந்தக் கருப்பி மூட்டையை எடுத்து வர ஓடினாள். அவள் சொல்லிக் கொண்டாள்: “பெரிய மூட்டைகளை அவிழ்த்துப் பார்க்க எப்போதுமே எனக்கு ஆசைதான். எப்போதுமே அவற்றுக்குள் நல்ல சமாச்சாரங்கள் ஏதாவது இருக்கும்.”

அவள் ஓடிப்போய் அதை அவிழ்த்துப் பார்த்தாள். அது முழுக்க கடுமையான வேலை இருந்தது. அதனால்தான் உலகத்தில் மற்ற எல்லோரையும்விட கருப்பு சகோதரியே எப்போதும் அதிகமாக வேலை செய்துகொண்டு இருக்கிறாள். வெள்ளையன் கருப்பனை வேலை செய்யச் சொல்கிறான். கருப்பன் அதைத் தன் மனைவியைச் செய்ய வைக்கிறான்.

குறிப்பு: Zora Neal Hurston என்ற அமெரிக்க கருப்புப் பெண் எழுத்தாளர் தொகுத்த “Mules and Men (1935) என்ற கருப்பர் நாட்டுப்புறக் கதைத் தொகுதியில் முதலில் வெளியானது. Zora Neal Hurston 1920 – களில் நிகழ்ந்த Harlem Renaissance என்று அழைக்கப்பட்ட கருப்பர் இலக்கிய இயக்கத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.

Henry Louis Gates, Jr. and Nellie Y. McKay (eds) The Norton Anthology of African American Literature, W. W. Norton & Company, New York, 1997 – லிருந்து எடுத்தது.

கருப்பர் நாட்டுப்புறக் கதைகள் என்ற பொதுத் தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது கிரேக்கப் புராணக் கதைகளில் வரும் Pandora – வின் கதையை அமெரிக்க வாழ் கருப்பர்கள் தமது சூழலைச் சொல்ல மறு உருவாக்கம் செய்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998.

தமிழில்: வளர்மதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: