சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து லண்டனில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணி – காணொளித் தொகுப்பு

ஜனவரி 31, 2009 அன்று இலண்டனில் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் பேரணியின் காணொளித் தொகுப்பு.

தொடர்புச் சுட்டி: http://current.com/items/89798420/sri_lanka_the_silent_cry.htm

இரு நாட்கள் முன்னர், நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருக்கையில், ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய , என்னைப் பற்றி உலவிக் கொண்டிருக்கும் “கிசுகிசு” ஒன்றைச் சொன்னார். “அவன் இப்போ தமிழ்த் தேசியவாதி ஆகிவிட்டானப்பா,” என்பதாம் அது :))))

1989 – ஆம் வருட அளவில் அ. மார்க்ஸ் தமிழ்ச் சூழலில் முன்னெடுத்த “தேசம” – “தேசியம்” குறித்த விவாதங்களால் உந்துதல் பெற்று, சுதந்திரமாக வாசிக்கத் தொடங்கிய பின்னர், 1992 – ஆண்டளவில், பெனடிக்ட் ஆண்டர்சன், பார்த்தா சாட்டர்ஜி போன்றோரையும் பிறரையும் தேடித்தேடி வாசித்ததோடல்லாமல், “தேசம்” – “தேசியம்” குறித்த விவாதங்களுக்கும் “குடிமகன்” – “குடியுரிமை” குறித்த பிரச்சினைகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை, திராவிட இயக்கங்கள், தலித் இயக்கம், தேசத்திற்கு மாற்றான குழும அமைவுகளை உருவாக்குவதன் சாத்தியங்கள், தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து சுட்டிக் காட்டியும் எழுதியும் (சிறிய அளவிலான பங்களிப்பையாவது) செயல்பட்டும் வரும் எனக்கு இது கடும் சினம் தருவதாகவே இருந்தது.

அற்பத்தனமான கிசுகிசுக்கள், அவதூறுகள், அபாண்டமான பழிகள் மறத்துப் போய் விட்ட போதிலும், அரசியல் ரீதியிலான எனது நோக்குகளை திரித்து செய்யப்படும் ஈனத்தனமான கிசுகிசுவுக்கு எனது தெளிவான மறுப்பை பதிவு செய்துவிடுவது அவசியம் என்று தோன்றுகிறது.

“தேசம்” ஒரு “கற்பிதம்” என்ற கருத்தமைவில் இன்னமும் எனக்கு மிகுந்த உடன்பாடே.

எனினும், ஈழத்தில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஈழம் ஒரு தனித் தேசமாக, விடுதலையை நோக்கி நகர்வதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கடந்த காலங்களிலும் தற்போதும் செய்த/செய்து கொண்டிருக்கிற பாரிய தவறுகளை எந்தவிதத்திலும நியாயாப்பாடு செய்யத் தயாரில்லை. எனினும், அதைக் காரணம் காட்டி தற்போதைய தேசிய விடுதலைப் போரில் அவர்களே தீர்மானகரமான சக்திகள் என்பதை மறுக்கவும் தயாரில்லை.

அவர்கள் மீதான விமர்சனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி, என்றோ காலாவதியாகிப் போன இயக்கங்களையும் விடுதலை முயற்சிகளைக் காட்டிக் கொடுத்து, சிறீலங்கா அரசுடன் வெளிப்படையாக கூட்டு வைத்து செயல்பட்டுவரும் கருணா தரப்பினருக்கு “தலித் அரசியல்” நியாயப்பாடு வழங்குவதும் அரசியல் முதிர்ச்சியற்ற அற்பத்தனமே.

விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களைக் கைவிடாமல, அவர்களுக்கான தார்மீக ஆதரவை முழுமையாக அளிப்பதே இன்றைய அரசியல் தேவை. விமர்சனம் – ஆதரவு – ஈழத்தில் வரலாற்று ரீதியாக ஒடுக்கபட்ட இஸ்லாமியர் – தலித்துகள் – மலையகத் தமிழர் குழுமங்களின் மறுக்கமுடியாத நியாயங்களை வலியுறுத்தல்; இத்தகைய அணுகுமுறையே இன்றைய தேவை.

தமிழகத்தில் முத்துக்குமரனின் அர்ப்பணிப்பை உத்வேகமாகக் கொண்டு ஈழ விடுதலைக்கு ஆதரவானதொரு சூழலை உருவாக்க முனைவதே இங்குள்ளோரின் உடனடிப் பணி. இதற்குத் தடையாக இருக்கும் வலிந்த ஊடகத் தணிக்கையை தகர்ப்பது முதற்கட்ட வேலை.

எந்த தலைபோகிற பிரச்சினையானாலும், “நானும் ரெளடிதான் நானும் ரெளடிதான்” என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருக்கும் தற்குறிகளைத் தவிர்த்துவிட்டு என்னாலான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.

முத்துக்குமரனின் மரணத்தை முன்னிட்டு அசராமல் அலறும் “சோ” தொடங்கி, ‘அமுக்கி வாசிக்கும்’ பாப்பாரக் குசும்பன்களின் சில அசட்டுக் கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தனிப்பட்ட வாழ்வழுத்தங்களுக்கு இடையிலும் அது தொடர்பான தயாரிப்பிலும் முயற்சியிலும் … பருண்மையான விளைவுகள் மட்டுமே பேசட்டும்.

Advertisements
அரசியல் நிகழ்வுகள், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: