ஈழ விடுதலைக்கு ஆதரவான இலங்கை சோஸலிஷ்ட் கட்சித் தலைவர் உரையாற்றும் நிகழ்வு

இலங்கை ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா அவர்கள் ஒரு மாதகாலம் இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி அரசின் நடவடிக்கைகளை விளக்கியும், ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.

நாளை சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள அய்க்கஃப் ஹவுசில் மாலை 5 மணியளவில் உரையாற்ற இருக்கிறார்.

வாய்ப்புள்ள பதிவர்கள் கலந்து கொள்ளலாம்.

சிறிதுங்கா 2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றவர். இலங்கையில் போரைக் கண்டித்தும், ஈழ விடுதலையை ஆதரித்தும் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும், கொழும்பு நகரில் தமிழரிடையே பயங்கரத்தை விதைத்து வரும் “வெள்ளை வேன்” ஆட்கடத்தல்கள், சித்ரவதைகள், கொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தக்கோரும் Civil Monitoring Committee (CMC) – யின் தலைவராகவும் செயல்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி விபரம்:

துவக்கவுரை: தோழர். விஜய் ஆனந்த்

சிறப்புரை: தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா
பொதுச் செயலாளர், ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி, இலங்கை.

நிகழ்வு ஒருங்கிணைப்பு: பயணிகள் வெளியீட்டகம்.

இடம்: ஐக்கஃப் ஹவுஸ், 125, ஸ்டெர்லிங் ரோடு (லயோலா கல்லூரி அருகில்)
நுங்கம்பாக்கம், சென்னை – 600034.

நாள்: 15.02.09 ஞாயிறு, மாலை 5 மணி.

Advertisements
அரசியல் நிகழ்வுகள், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: