புலிகளும் கழுதைப் புலிகளும் … 1

காற்றில் அலையும் சிறகொன்று
பெர்டோல்ட் ப்ரெக்டிற்கு:

சிறு ஒரு பகிர்வும்
சொல்லொன்னாச் சேதிகளைப் பகரும்
குற்றமாகும் காலமாகிப்போனதை
என்னென்பது?

– பால் செலான் (1920 – 70)

கடந்த ஒரு வாரகாலம் சொல்லொன்னா மன அலைக்கழிதல்களில் கழிந்து எழுத நினைத்திருந்தவற்றை எல்லாம் அழித்துச் சென்றது.

ஈழ மக்களின் அவலங்கள், ஈவு இரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளின் கோரநடவடிக்கைகளிலும், சர்வதேச ‘சமாதான’ அமைப்புகளின் திட்டமிட்ட பாராமுகப் புறங்கை நடவடிக்கைகளிலும் கேட்பாரற்றுக் கரைந்து கொண்டிருக்கும் துயர் என்னுள் கிளர்த்திய குற்ற உணர்ச்சிகள் இங்கு பகிர்ந்துகொள்ள இயலாதாவை. “சிறு ஒரு பகிர்வும் சொல்லொன்னாச் சேதிகளைப் பகரும் குற்றமாகிப் போகும் காலம்” நமது :((

எனது இயலாமையை நடவடிக்கைகளில் மடைமாற்ற முனைந்த அனைத்து சிறு சிறு முயற்சிகளும், கணப்பொழுதுகளில் மாறிக்கொண்டிருந்த நிகழ்வுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் திணறிச் சிதறுண்டுபோனதையும் இங்கு விவரித்துக் கொண்டிருக்கவியலாது.

இம்முயற்சிகளுக்கு இடையிலும் ஈழ நிகழ்வுகளையொட்டி பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் பலவிதமான கருத்துக்களை (புலிகளின் ‘பாசிசம்’, ஈழத்து தலித் மக்களின் நலன்கள், சிறுபான்மையினர் உரிமைகள் இன்னும் பலப்பல) மீள் பரிசீலனை செய்யும் நோக்கில் நூல்களைத் திரட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பும் நிகழ்வுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் பல திசைகளில் சிதறிக் கொண்டிருந்தது.

மேலுள்ள கேள்விகளை பரிசீலித்துக் கொண்டிருக்கையில் “ஈழத்தில் இனப்படுகொலையே நடக்கவில்லை, யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் மக்கள் அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற கருத்து உதிர்ப்புகள் முன்னாள் நண்பர்களின் ‘மேதமை மிகுந்த’ அபிப்பிராயங்களாகப் பரவவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை விளைவித்தது.

அந்த ‘மேதகைமை மிகுந்த’ பேட்டி வெளியாகும் முன்னரே இனப்படுகொலை (genocide) என்று எத்தகைய நிகழ்வுகளை வரையறுப்பது என்பது குறித்து விரிந்த ஒரு கோட்பாட்டுத் தெளிவிற்கு வந்து சேர்ந்திருந்தேன். அத்தெளிவையொட்டி தொடர்ந்த கேள்விகள்.

கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் இனப்படுகொலை என்று சொல்லத்தக்க நிகழ்வுகள் பல, உலகின் பல பாகங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த போதிலும் சர்வதேசச் சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் அந்நிகழ்வுகளை அவ்வாறு அங்கீகரித்து தமது தலையீட்டைச் செய்ய விடாமல் தடுத்தது என்ன?

சர்வதேச – பிராந்திய வல்லாதிக்க நலன்கள் வெளிப்படையானவை. அதையும் மீறி சர்வதேசச் சட்டம் எங்ஙனம் வரையறுக்கப்பட்டிருக்கிறது? ஒரு நாட்டின் ‘இறையாண்மை’க்குப் பாதகமில்லாமல் சர்வதேசச் சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலை நிகழ்வுகளைத் தடுக்கத் – தலையிட, சர்வதேச உறவுகளும் சர்வதேசச் சட்டங்களும் எந்த வகையில் தடையாக இருக்கின்றன? அதிலிருந்து விடுபட சர்வதேசச் சட்டங்களை எவ்வாறு மீள எழுத வைப்பது, சர்வதேச உறவுகளை எவ்வாறு மீள வரையறுப்பது போன்ற கேள்விகளின் பின்னால் அலைந்து கொண்டிருக்க நேரிட்டது.

ஈழத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களை இக்கேள்விகளுக்கான தற்காலிக விடைகளை அடைந்தேனும், அவற்றைப் பகிர்ந்தேனும், சிறு அளவிலேனும் அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான நிலைமைகளை உருவாக்கும் முயற்சியில் பங்களிப்பு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்க நேரிட்டது.

இத்தேடல்களில் மூழ்கியிருந்ததில், எனது ‘மேன்மை மிகுந்த’ முன்னாள் நண்பர்கள் அசட்டுத்தனமாக உதிர்த்துச் சென்று கொண்டிருந்த மேதைமை மிகுந்த கருத்துக்களுடன் இடையீடு செய்ய இயலாத நிலைமை (விருப்பமும் இருக்கவில்லை). அனைத்திற்கும் காற்புள்ளி வைத்து செயலிழக்கச் செய்து எனது இயலாமையைச் சினமாக மாற்றின கடந்த ஒரு வார காலம் ஊடகங்களும் அரசு எந்திரமும் மேற்கொண்ட திட்டமிட்ட பிரச்சார – புரளி யுத்தம்.

பெரும் அலைகளெனத் தொடர்ந்து மோதிய இப்பிரச்சாரத்தில் நிலைகுலைந்து போனேன். வெளிப்படையாக ஒப்புக் கொள்வதென்றால், இதற்கு முன்னர் ஊடகங்களும் அரசு எந்திரங்களும் மேற்கொண்ட பெரும் பிரச்சாரங்களுக்கு ஒருபோதும் ஆட்பட்டதில்லை. ஆனால், இச்சம்பவத்தில் நிலைதடுமாறி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேறிட்டது. நான் மட்டுமின்றி, தெளிந்து யோசிக்கக்கூடிய எனது நண்பர்கள் பலரும் இது போன்று நிலைகுலைந்து போய் நாங்கள் பரஸ்பரம் எமது வேதனைகளைப் பகிந்துகொண்டிருந்தோம்.

விடுபட்டு தெளிந்தபின், இது என்னுள் எழுப்பிய கேள்விகள், பிரச்சாரத்தின் அமைப்பு (structure of propaganda) குறித்த கேள்விகளின் பின் தொடரச் செய்துள்ளது. இவை குறித்து அடைந்துள்ள தெளிவுகளை ஒவ்வொன்றாக இங்கு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

அதற்கு முன்னதாக, “சிறு பகிர்வும் சொல்லொன்னாச் சேதிகளைப் பகரும் குற்றமாகிப் போகும் காலம் நமது” என்ற தெளிவின் பின்னும், கவிதை எழுதுவது சாத்தியமாகும் எனும்போது, எனது முன்னாள் சகாக்களின் மிக மோசமான தவறுகளை சுட்டிக் காட்டுவதும் அவசியம் என்று தோன்றியதால் இதை ஒரு சிறு தொடராக எழுத முடிவு செய்திருக்கிறேன்.

(தொடரும் … )

—————————————-

குறிப்புகள்:

1) இயலாமையும் சினமும் மனச்சோர்வும் கலந்து குழம்பியிருந்த நிலையிலிருந்து விடுபட்டு, சற்றே தெளிவைச் சேர்ந்ததுமே இதை எழுதத் துவங்கியிருக்கிறேன். இதை ஒரு விவாதமாகவோ கூட வளர்த்துச் செல்லும் விருப்பம் இல்லை.

வழமைகளிலிருந்து விலகி, மாற்றுகளை நோக்கிப் பயணிக்க முனைந்த சகபயணிகள் என்று யாரையெல்லாம் நம்பிக் கரம் கோர்த்தேனோ, எனது நேசத்தைப் பகிர்ந்தேனோ, அவர்களில் பலர் வஞ்சம் தீர்க்கும் கொடூர மனதினராக தம்மை வெளிப்படுத்திக் கொண்டபின், அதிகார வேட்கைகொண்டு அலைபவர்களாகிப் போனதைக் கண்ணுற்றபின், தமக்கொரு நியாயம் மற்றவருக்கொரு நீதி என்று நடப்பவர்களாக பலமுறை நிரூபித்தபின், ‘அவப்பெயர்’ காக்கத் தந்திரங்கள் செய்வதைப் பலமுறை சோதித்துக் கண்டபின்,
இத்துனை காலமும் அவர்கள் பேசித் திரிந்தவற்றுக்கும் அவர்களது உட்கிடக்கைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று கண்டு கொண்டபின் அதை அவர்களை நோக்கி நேராகச் சொல்ல வேண்டும் என்ற சீற்றத்தில் (“அறச் சீற்றம்” என்றுதான் எழுதவேண்டும்; ஆனால் ‘அறத்தை’ இவர்கள் முறமாக்கிப் பலகாலமாயிற்று என்பதால் தவிர்க்கிறேன்) எழுதத் தொடங்கியிருப்பது.

2) பால் செலானின் கவிதைகள் இன்னும் பலவற்றை மொழியாக்கம் செய்து வைத்திருக்கிறேன். அவரைப் பற்றிய அறிமுகம் சந்தர்ப்பம் வாய்க்கும்போது. இத்தொடரின் கருப்பொருளுக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கருதியதால் மேலுள்ள கவிதை. அலைக்கழிந்த மனநிலையில் மொழியாக்கம் செய்தது. குறை இருப்பின் நண்பர்கள் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். அதன்பொருட்டு ஆங்கில மொழியாக்கத்தை கீழே தந்திருக்கிறேன்:

A Leaf, treeless
for Bertolt Brecht:

What times are these
when a conversation
is almost a crime
because it includes
so much made explicit?

Paul Celan: Selected Poems
Translated by Michael Hamburger and Christopher Middleton, with an
Introduction by Michael Hamburger.

Penguin, 1972.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: