இறுதிக் கவிதை

என் குருதியை

மரணித்த என் உடல் போர்த்திய துணியை

என் உடலில் எஞ்சியிருப்பது அத்தனையும்

எடுத்துச் செல்லுங்கள்

கல்லறையில் தனித்திருக்கும் என் பிணத்தைப் புகைப்படமெடுங்கள்

புவியெங்கும் அனுப்பி வையுங்கள்

மனச்சான்றுள்ளோரும் நீதியரசரும்

கொள்கைவழிப்பட்டோரும் நற்சிந்தையோரும் காண

அனுப்பி வையுங்கள்

கபடமறியா இவ்வான்மாவின் சுமையை

வெட்கித் தலைகுனிந்து உலகின்முன் அவர்கள் சுமக்கட்டும்

”அமைதியின் பாதுகாவலர்” கரங்களில்

பாவக்கறை படியாத பாழ்பட்ட இவ்வான்மா பட்ட துயரை

தம் மழலையர்முன் அவர்கள் சுமக்கட்டும்.

– ஜுமாஹ் அல் டோஸ்ஸாரி

பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ஜுமாஹ் அல் டோஸ்ஸாரி காண்டனாமோ சிறையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக, எக்குற்றமும் சுமத்தப்படாமல், நீதிமன்ற விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருக்கிறார். 2003 ஆம் இறுதியில் இருந்து தனிமைச் சிறையில். அமெரிக்க இராணுவம் தரும் தகவலின்படியே 12 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சிறையில் இவரைச் சந்திக்கச் சென்ற வழக்குரைஞருமே ஒருமுறை, கையில் அறுத்த காயத்திலிருந்து இரத்தம் வழிய, தூக்கில் தொங்கும் நிலையில் காண நேரிட்டிருக்கிறது.

DEATH POEM

Take my blood.
Take my death shroud and
The remnants of my body.
Take photographs of my corpse at the grave, lonely.
Send them to the world,
To the judges and
To the people of conscience,
Send them to the principled men and the fair-minded.
And let them bear the guilty burden, before the world,
Of this innocent soul.
Let them bear the burden, before their children and before
history,
Of this wasted, sinless soul,
Of this soul which has suffered at the hands of the “protectors
of peace.”

Poems from Guantanamo: the Detainees Speak

Ed. Marc Falkoff

University of Iowa Press, 2007.

Advertisements
மொழியாக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: