இரு குறிப்புகள்

1.

நோன்புப்பெருநாளும் வந்தது, என் தந்தை வரவில்லை
க்யூபாவிலிருந்து வரவில்லை.

என் கண்ணீர் குழைந்த நோன்புக்கஞ்சியைப் பருகுகிறேன்
வேறெதுவும் என்னிடம் இல்லை.

என் தந்தையின் அன்பை அவர்கள் பறித்தது ஏன்?
இத்தனை கடுமை ஏன்?

2.
உடல் இருளுள் துடிக்கும் இதயம் போன்று
இக்கூண்டினுள்ளும் வாழ்வை இசைத்து உயிர்த்திருக்கிறேன்

மாண்பற்ற கோழைகளுக்கு சுதந்திரப் பிறவிகள் என்ற நினைப்பு
அடிமைகள் என்பேன் நான்.

சிந்தனைச் சிறகுகள் மேல் நான் பறக்கிறேன்
இக்கூண்டினுள்ளும் அதிகச் சுதந்திரமறிவேன்.

ஷைக் அப்துர்ரஹீம் முஸ்லிம் தோஸ்த்

ஷைக் அப்துர்ரஹீம் முஸ்லிம் தோஸ்த் பாகிஸ்தானின் மிகவும் மதிப்பிற்குரிய கவிஞராக, பத்திரிகையாளராக, சமய அறிஞராக அரியப்பட்டவர். 2001 – ல் பாகிஸ்தானிய உளவுப் பிரிவால் சகோதரருடன் சேர்த்து கைது செய்யப்பட்டு அமெரிக்கப் படைகளிடம் ஒப்புவிக்கப்பட்டனர். காண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் 2005 ஏப்ரல் மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர். சிறைமீண்டு சகோதரருடன் இணைந்து காண்டனாமோ அனுபவங்களை நூலாக வெளியிட்டதும் அக்டோபர் 2006 – ல் மீண்டும் பாகிஸ்தானிய உளவுப் பிரிவால் கைது செய்யப்பட்டவரின் நிலை என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.

TWO FRAGMENTS

1.
Eid has come, but my father has not.
He is not come from Cuba.

I am eating the bread of Eid with my tears.
I have nothing.

Why am I deprived of the love of my father?
Why am I so oppressed?

2.
Just as the heart beats in the darkness of the body,
So I, despite this cage, continue to beat with life.

Those who have no courage or honor consider themselves free,
But they are slaves.

I am flying on the wings of thought,
And so, even in this cage, I know a greater freedom.

Poems from Guantanamo: the Detainees Speak

Ed. Marc Falkoff

University of Iowa Press, 2007.

Advertisements
மொழியாக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: