வ (எ) வளையாபதி – (பின் நவீனத் தமிழ் காவியம்)

12.12.12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் 12.30 ற்கும் இடையில், ஃபேஸ் புக்கில் நடந்த ஒரு சில்மிஷச் சில்லறைச் சண்டையிலே வ (எ) வளையாபதி பிறந்தான்.

தமிழிலே ஒரு நவீன காவியத்தைப் படைத்துவிட வேண்டும் என்ற அளப்பரிய அவாவும், தலைகீழாக நின்று பிரயத்தனம் செய்தாலும் நீ ஒரு நான் – ஃபிக்‌ஷன் ஆசாமிதான் என்ற நண்பர்களின் கேலிக்கும் தவப்புதல்வனாக, மலினமான பிரதிகளின் பாழ் பரப்பு என்று பழிப்புக் காட்டிவந்த அக்கால தமிழ் இலக்கியப் பரப்பில் வந்து விழத் துணிந்தான்.

கருவிலே திருவான வ வின் முன் எழுந்த முதல் பிரச்சினை, என்ன புனைப் பெயரைக் கைக்கொள்வது என்பதாக இருந்தது. வம்பிலே விளைந்தவன் என்பதைக் குறிப்பால் உணர்த்தவல்லதாக இருக்கவேண்டும். இலக்கிய நயம் கூடியதாக இருக்க வேண்டும்.  Abstract ஆக, ஒரே சொல்லாக, வல்லினம் அல்லாது வல்லினத்தை – வன்மையைக் குறிப்பதாக இருக்க வேண்டும். வ என்ற இடையினம் கனகச்சிதமாக இருந்தது.

வ வின் முன் எழுந்த அடுத்த பிரச்சினை, என்ன பெயரைச் சூட்டிக் கொள்வது? உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த கம்பீரமும் உள்ளூர் இலக்கியப் பாரம்பரியத்தில் ஊறிய தொனியையும் உணர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும். Kafka வின் K போல வ வுக்கு பொருந்திவர வேண்டும். வ – வளையாபதி.

மூன்றாது முக்கிய பிரச்சினையாக வ வின் முன் நின்றது வாழ்த்துப் பா.

தமிழ்க் கவி மரபில் நின்று வ புனைந்த பா வானது இஃதாக அமைந்தது:

வந்தேன்

வாதாபி கொன்றேன்

விதிர்த்தேன் விரிகாவிரி

வீணை வேந்தன் வென்றேன்

தந்தேன் தீந்தமிழ்

சலதரன் செப்பல்

வணங்கி வாழ்த்த

வாவென்பேன்

வாழிய வாழியவே!

வந்து வ

வள் வ

நான் - ஃபிக்‌ஷன் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: