அடியும் முடியும் அற்றவனே! போற்றி! போற்றி!

சிருஷ்டியின் கடவுளான பிரம்மன் நான்முகன்.

“பூலோகத்தில் – பாரத வர்ஷத்தில் வழிபடும் தலமே இல்லாது கடவ!” என்று அவனுக்கு சாபம் கிடைத்த புராணக் கதை (சிற்”சிறார்”க்கு இது இந்துத்துவப் பெருங்கதையாடல் என்பதாகக்கூடும்) ஒன்று உண்டு.

அதாகப்பட்டதானது, அழிவுக் கடவுள் சிவபெருமானார், சிருஷ்டிக் கடவுள் பிரம்மாவினதும், காக்கும் கடவுள் பாற்கடலானதும் உண்மையைச் சோதிக்க திருவிளையாடல் ஒன்றை ஆடவிரும்பினானாம். ஒரு புண்ணியப் பெரும் சந்தர்ப்பத்திலே விஸ்வரூபம் எடுத்து நின்றானாம்.

”இருவரில் ஒருவர் எனது அடியையும் மற்றொருவர் முடியையும் கண்டு வருக!” என்று பணித்தானாம்.

அடியை நோக்கி பாற்கடலானும் முடியை நோக்கி நான்முகனும் பயணித்தவராம்.

முடியைக் காண்டுரச் சென்ற நான்முகன் பாதியிலே சோர்ந்து விழிக்க, பரமன் கொண்டையிலே இருந்து விழுந்த பூ (சரியாக நினைவில் இல்லை. பூஜைக்கு ஆகாத மலராகச் சபிக்கப்பட்டது. தாழம்பூ என்று நினைவு. திருத்தவும்.) ஒன்றைப் பிடித்தானாம். தான் இந்த காரியமாகப் புறப்பட்டேன். முடியல்லை. எனக்கு உதவி செய்வாயா என்று இறைஞ்சினானாம்.

பூவும் இறைவனார் கேட்கிறாரே என்று ஒப்புக் கொண்டதாம்.

அடியைக் காண்டுரச் சென்ற பரந்தாமனுக்கும் சோர்வாம். ஆனால், அவனோ பிரம்மனானப்பட்டவன் செய்யத் துணிந்த அபச்சாரத்தைச் செய்யத் துணியாமல் திரும்பினானாம்.

பரமனது திருவாய் மலரத் திரும்பியவரிடத்தில் “கண்டீரா?” என்ற அவன் கண்டிப்பான கேள்விக்கு, “கண்டேனில்லை!” என்று உண்மையை அதிகாரத்திடத்தில் ஒப்புக்கொண்டானாம் பரந்தாமன்.

கள்வன் நான்முகனோ “கண்டேன்” எனப் பொய் சொன்னான். பூவையும் (தாழம்பூ?) பொய் சாட்சி சொல்ல வைத்தான்.

முக்காலமும் உணர்ந்த பரமன் சபித்தான்.

“பூலோகத்திலே உனக்கு வழிபடுதலம் இல்லாது கடவ! பொய் சாட்சி பகன்ற பூவே! பூஜைக்கு உகந்த மலராக இனி உனைத் தொடுக்க மாட்டாராக!” என்று.

பரமனே போற்றி! போற்றி!

பரந்தாமனும் போற்றி! போற்றி!

அல்லா “நாமமும்” ஓங்குக!

(மன”ரம்”மிலே எழுதியது. இறைவனடியார் மன்னிக்க!)

Advertisements
அரசியல், அரசியல் சதிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: