உள்ளும் வெளியும் – தமிழகமும் தில்லியும்

தமிழ் நாட்டை மையமாகக் கொண்ட அரசியலிலும் தில்லியை மையமாகக் கொண்ட அரசியலிலும் “மாற்றத்தை” உருவாக்குபவர்களாகப் பரிணமிப்பதில் உள்ளாள்/வெளியாள் (insider/outsider) என்ற ஆளுமைத் திறன் முக்கியமானதொரு வித்தியாசப்படுத்தும் புள்ளியாக இருக்கிறது என்பது என் துணிபு.

தில்லியை மையமாகக் கொண்ட அரசியலில், ஒரு கட்சியில் அல்லது இயக்கத்தில் “உள்ளாட்களாக” இருந்து விமர்சனங்களை வைத்து வெளியேறி “வெளியாட்களாக” உருமாறியவர்கள் நீடித்த செல்வாக்கையோ தீர்மானகரமான தாக்கங்களையோ ஏற்படுத்த இயலாத நிலையைக் காணலாம். “வெளியாட்களாகத்” தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்களாலேயே செல்வாக்கு மிகுந்தவர்களாக உருப்பெற முடிந்திருக்கிறது.

காங்கிரசில் இருந்து வெளியேறியவர்களால் தலைமை தாங்கப்பட்ட ஜனதா கட்சி முதல் எடுத்துக்காட்டு. அடுத்தது ஜனதா தளம். மாபெரும் ஆளுமையாக உருவான வி. பி. சிங்.

ஜன சங்கம் பாஜக வாக புதிய அவதாரம் எடுத்த பின்னர், ஜன சங்கத்தின் உள்ளாட்களாக இருந்த அத்வானி, வாஜ்பாய் ஆகியோரின் செல்வாக்கு பாஜக வினுள்ளாகவே கேள்விக்கிடமில்லாத நிலையில் இருந்ததில்லை. ஆனால், ஜன சங்கம், பாஜக இவற்றின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஏதும் செய்தவராக முன்னிறுத்தப்படாத நரேந்திர மோடி, தேநீர் விற்றவர் என்ற “வெளியாள்” அடையாளத்தை முன்னிலைப்படுத்தியே இன்று பாஜகவில் கேள்வி கேட்க முடியாத தலைமை என்ற நிலையை அடைந்திருக்கிறார்.

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் சாக்கடை அரசியலுக்கு வெளியே இருந்த “தூய்மையான” நபர் என்ற வகையில் “வெளியாள்” அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதே தில்லி அரசைக் கைப்பற்றிவதில் தீர்மானகரமான காரணியாக இருந்தது.

தமிழ் நாட்டை மைய்யமாகக் கொண்ட அரசியலில் மாற்றத்திற்கான அரசியலை முதன் முதலில் மொழிந்தவர் பெரியார். காங்கிரசில் “உள் ஆளாகக்” தொண்டாற்றிவிட்டு, அதைவிட்டு வெளியேறிய பின்னரும் தன்னைக் காங்கிரஸ்காரராகவே சில காலம் கருதியிருந்து செயல்பட்டு, அதன் பின்னரே முற்றிலும் “வெளியாளாகத்” தன்னைப் பிரகடணப்படுத்திக் கொண்டவர். உள்ளிருந்தான அவரது விமர்சனங்கள் வெளியேறிய பின்னர் கூர்மையடைந்தன. தமிழ் நாட்டு அரசியல் களத்தில் தீர்மானகரமானச் சக்தியாக அவர் உருப்பெற்றது இப்பயணத்தின் ஊடாகவே நிகழ்ந்தது.

அண்ணா, எம்ஜிஆர் இருவரும் இதே வழிமுறையைப் பின்பற்றியே தீர்மானகரமான சக்தியாக உருவெடுத்தனர். மு. க என்றும் “உள்ளாளாகவே” இருந்தவர். Political intrigues வழியாகவே ஆட்சியைக் கைப்பற்றியவர். மக்களின் செல்வாக்கு பெற்றத் தலைவராக அவர் ஒருபோதும் உருப்பெற்றதில்லை.

வைகோ உள் ஆளாக இருந்து வெளியாளாக மாறியவர் என்பது நிதர்சனமாயினும் அவரால் தீர்மானகரமான ஒரு சக்தியாக உருவாக முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தெளிவான. தீர்க்கமான மாற்று அரசியல் agenda எதையும் அவர் ஒருபோதும் முன்வைக்கவில்லை என்பதே அதற்கான பதில். வெளியாளாகவே நீண்ட காலம் நிலைத்துவிட்டதும், பல கட்சிகளுக்கு உள் ஆள் பாத்திரத்தை ஆற்றியதும் மற்ற காரணிகள்.

விஜயகாந்தோ வெளியாள் என்பது மட்டுமல்லாமல், தெளிவான மாற்று எதையும் முன்னிறுத்த முடியாதவர்.

தமிழக அரசியலில் வெளியாட்கள், தம்மை உள் ஆட்களாக அறிவித்துக் கொள்வதன் முதல் சமிக்ஞையாகத் தமது கட்சிகளின் பெயர்களில் “திராவிட” அல்லது “கழகம்” என்ற பெயர்களை ஒட்டுகளாக இணைத்துக் கொள்வதைக் குறிப்பிடலாம்.

எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னிருந்தே தமிழ் நாட்டு அரசியல் களத்திற்கு தீர்க்கமான மாற்றம் தேவையாக இருந்து வருகிறது. ஆனால், அத்தகைய மாற்றம் இதுவரையில் உருவாகவில்லை. மாற்றத்தை முன்னெடுக்கும் தீர்க்கமான நோக்குடையோர் உருவாகவில்லை என்பதே துயரமான உண்மை.

சீரழிவின் பாதையில் தறிகெட்டு ஓடி, இப்போது முட்டுச் சந்தில் முடிந்திருக்கிறது தமிழக அரசியல்.

தெளிவான, தீர்க்கமான, ஆரோக்கியமான மாற்றம் மீண்டும் நிகழ, குறைந்தது 15 ஆண்டுகள் பிடிக்கும். அவ்வாறான தொலை நோக்கான இலக்கை வகுத்துக் கொண்டு, பல துறைகளிலும் திறன் மிக்கவர்களாகத் தயார்படுத்திக் கொள்ள விழைவதே நம்முன் நிற்கும் சவால். அது உள்ளிருந்தே உருவாக வேண்டும். பெரியாரின் வழிப்பட்டே உருவாக வேண்டும்.

Advertisements

2 பதில்கள் to “உள்ளும் வெளியும் – தமிழகமும் தில்லியும்”

  1. அருண்மொழிவர்மன் Says:

    இறுகிவிட்ட அமைப்பொன்றில் / சமூகம் ஒன்றில் மாற்றத்தை வருவிக்க முயற்சிப்பவர் அந்த சமூக வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்தாலோ அல்லது அமைப்பில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டாலோ மாத்திரமே அது சாத்தியம் என நினைக்கின்றேன். எளிய உதாரணம் பெரியார். ஆனால் தேர்தல் அரசியல் குறிடத்து எதிவும் சொல்ல முடியவில்லை

    • Valarmathi Says:

      நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் புறக்க்கணித்துவிட இயளாது. தேர்தல் அரசியலைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை உருவாக்கவேண்டும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: