மரணத்தின் வாசனை
என் வீடு முழுக்கப் பரவியிருக்கிறது
வரவிருக்கும் மரணத்தின் வாசனை
புற்றீசல் போலப் பரவும்
படரும் வாசனை
வீடு முழுக்கப் பரவியிருக்கிறது
வாசனை
கண் முன்னே
நிழலாடவும் செய்கிறது
தொய்ந்த உடலாக
தளர்ந்த நடையாக
அவிழ்ந்த ஆடையாக
மரணத்தின் வாசனை
என் காதருகே
மெலிதாக கிசுகிசுக்கவும் செய்கிறது
தணிந்த குரலாக
விசும்பலாக
மௌனமாக
செவி சாய்த்து
விழி கவிழ்த்து
நாவடக்கி
சுவாசித்து
காத்திருக்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்