வள் வ

வசவு வா வானவன் வள் வள் என எதிர்க்கவிதை எழுதத் தொடங்கினான்.

வ 

வள்

வள் வள்

வள்ளலை

வெல்லுமோ

எள்ளல்

துக்கடாத் துள்ளல்

துட்டுக்குத் துண்டேந்தும்

சிறு கும்பல்

வெம்பல்.

சல்லிப்பயலுவ! முட்டாக் கழுதைக! மூதேவிக! முதுக்குக் கீழே சொறிந்து விடும் ஜென்மங்க! ஜந்து! ஜடம்! மூடம்! சகட்டு மேனிக்கு வார்த்தைகளை வீசினான்.

வார்த்தை, வீச்சம், வெங்காயம், வெள்ளைப் பூண்டு!

உருப்படத் தெரியாத வெங்காயம்! ஈர வெங்காயம்!

நீ ஒரு பலாப்பழமடா என்றான் வ வின் வள் – ளை ரசிக்காத நண்பனொருவன்.

வாழைபழத் தோலு என்று எரிந்து விழுந்தான் வள் வ.

வெளக்கெண்ணெய் என்றான் நண்பன்.

சர்ர்தான் போடா!  எச்சி எலையிலே தடவிப் போடறேன்! என்றான் வள் வள்.

போனவன் போனவந்தான்.

செல்லமே! ஏனடா இப்படி எல்லோரிடமும் எரிந்து விழுகிறாய் என வந்தாள் காதலி.

போடி புண்ணாக்கு! பொரிந்து தள்ளினான் வ.

திருந்தாத ஜென்மம்! உன்னை வளைக்கவே முடியாதடா வள் வள் விலங்கு!

அவளும் போனாள்!

சர்தாம் போடி! நான் என்ன பேடியா! பொறுக்கி!

பொங்கினான் வள் வள்!

வ (எ) வளையாபதி – (பின் நவீனத் தமிழ் காவியம்)

வந்து வ

நான் - ஃபிக்‌ஷன் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வந்து வ

முதல் மூன்று பிரச்சினைகளையும் வெற்றிகரமாக தீர்த்த வ வால் தீர்க்கவே முடியாத பிரச்சினைகள் சில, பிரதிக் களனில் திரியத் தொடங்கிய நாள் முதலே பீடித்திருந்தன. நண்பர்கள் அதற்கு சூட்டியிருந்த பட்டப் பெயர் “வந்து வ”.

இதை எழுத உத்தேசம், அதை எழுத உத்தேசம் என்று அவ்வப்போது அறிவித்து கொண்டிருப்பது வ வின் வாடிக்கை. ஆனால், ஒரு வெங்காயமும் வராது. வ வை எப்போதாவது வாசிப்பவர்கள்கூட இவனது அறிவிப்புகளை கவனித்து வந்து சலிப்பு முற்றி “ஒரு வெளக்கெண்ணெயும் உருப்படியாக எழுதவியலாத விளங்காப்பயல் இந்த வ” என்று விளாசும் அளவுக்கு தெளிவாக வெளங்கிப் போனது.

“வந்து வ” என்றும் சில வட்டாரங்களில் ”விளங்கா வெட்டி வ” என்றும் வ வழங்கப்படலானான்.

தனக்கு சூட்டப்பட்டிருந்த பட்டப் பெயர்களை ஆரம்பத்தில் விளையாட்டாகவே எதிர்கொண்டான்.

வந்து வ

வரும் வ

வராது வ

வரும் ஆனா வராது வ

வந்தாலும் வரும் வ

வரவே வராது வ

வராமல் போனால் என்ன வே

லேட்டா வந்தாலும்

லேட்டஸ்ட்டா வருவான் வ

என்று கிறுக்கி வந்தனம் செய்தான்.

கொஞ்ச காலம்தான் இந்த வந்தனமெல்லாம். வம்புக்குப் பிறந்தவனுக்கு வணக்கமெல்லாம் எத்தனை நாள் விளங்கும்.

“வந்து வ” வெகு சீக்கிரத்திலேயே வண்டை வண்டையாக ஏசத் தொடங்கிவிட்டான்.

“வசவு வ” வானான்.

வ (எ) வளையாபதி – (பின் நவீனத் தமிழ் காவியம்)

வள் வ

நான் - ஃபிக்‌ஷன் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

வ (எ) வளையாபதி – (பின் நவீனத் தமிழ் காவியம்)

12.12.12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் 12.30 ற்கும் இடையில், ஃபேஸ் புக்கில் நடந்த ஒரு சில்மிஷச் சில்லறைச் சண்டையிலே வ (எ) வளையாபதி பிறந்தான்.

தமிழிலே ஒரு நவீன காவியத்தைப் படைத்துவிட வேண்டும் என்ற அளப்பரிய அவாவும், தலைகீழாக நின்று பிரயத்தனம் செய்தாலும் நீ ஒரு நான் – ஃபிக்‌ஷன் ஆசாமிதான் என்ற நண்பர்களின் கேலிக்கும் தவப்புதல்வனாக, மலினமான பிரதிகளின் பாழ் பரப்பு என்று பழிப்புக் காட்டிவந்த அக்கால தமிழ் இலக்கியப் பரப்பில் வந்து விழத் துணிந்தான்.

கருவிலே திருவான வ வின் முன் எழுந்த முதல் பிரச்சினை, என்ன புனைப் பெயரைக் கைக்கொள்வது என்பதாக இருந்தது. வம்பிலே விளைந்தவன் என்பதைக் குறிப்பால் உணர்த்தவல்லதாக இருக்கவேண்டும். இலக்கிய நயம் கூடியதாக இருக்க வேண்டும்.  Abstract ஆக, ஒரே சொல்லாக, வல்லினம் அல்லாது வல்லினத்தை – வன்மையைக் குறிப்பதாக இருக்க வேண்டும். வ என்ற இடையினம் கனகச்சிதமாக இருந்தது.

வ வின் முன் எழுந்த அடுத்த பிரச்சினை, என்ன பெயரைச் சூட்டிக் கொள்வது? உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த கம்பீரமும் உள்ளூர் இலக்கியப் பாரம்பரியத்தில் ஊறிய தொனியையும் உணர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும். Kafka வின் K போல வ வுக்கு பொருந்திவர வேண்டும். வ – வளையாபதி.

மூன்றாது முக்கிய பிரச்சினையாக வ வின் முன் நின்றது வாழ்த்துப் பா.

தமிழ்க் கவி மரபில் நின்று வ புனைந்த பா வானது இஃதாக அமைந்தது:

வந்தேன்

வாதாபி கொன்றேன்

விதிர்த்தேன் விரிகாவிரி

வீணை வேந்தன் வென்றேன்

தந்தேன் தீந்தமிழ்

சலதரன் செப்பல்

வணங்கி வாழ்த்த

வாவென்பேன்

வாழிய வாழியவே!

வந்து வ

வள் வ

நான் - ஃபிக்‌ஷன் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »
%d bloggers like this: