பல்லாண்டு

சின்னப் பல்

சிற்றரிசிப் பல்

 

சிணுங்கும் பல்

சிரிக்கும் பல்

 

சிங்கப் பல்

சிங்காரப் பல்

 

தங்கப் பல்

தனிப் பல்

 

கடைவாய்ப் பல்

கடும் பல்

 

குட்டிப் பல்

குறுகுறுக்கும் பல்

 

அக்காள் பல்

அழகுப் பல்

 

அப்பன் பல்

அதட்டும் பல்

 

அம்மா பல்

அன்புப் பல்

 

ஆயா பல்

ஆடும் பல்

 

தாத்தா பல்

தள்ளாடும் பல்

 

அத்தைப் பல்

சொத்தைப் பல்

 

மாமன் பல்

புலிப் பல்

 

மச்சான் பல்

நரிப் பல்

 

புலிப் பல்

புல் படாப் பல்

 

நரிப் பல்

புலப்படாப் பல்

 

நாய்ப் பல்

நயக்கும் பல்

 

பேய்ப் பல்

பெரும் பல்

 

உன் பல்

மயக்கும் பல்

 

என் பல்

மெல்லும் பல்

 

எனக்கும் பல்

உனக்கும் பல்

 

பல் பல்

பல்லாயிரம் பல்.

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

பிழையின் பிறப்பு

பொய் பொய் பொய்

நீ சொல்வதெல்லாம் பொய்

கள்ளன் கயவன் கல்நெஞ்சன்

கபட நாடகக் கலையில் கரைகண்டவன்

திருகு விழியன்

திணவெடுத்துத் திசையற்றுத் திரிபவன்

புழு

பூச்சி

புல்

பூண்டு

ஒப்பிலாப் புழுதி நீ

ஒட்டுப் பேன் நீ

புழை விழைந்தொழுகும்

பீளை நீ

பிழையின் பிறப்பு நீ

பிழைத்து போ …

பிணை முறித்து

பிழைத்து

பன்றியாய் பீ தின்று

பாவமும் பரிகசிக்க

பாழாய்

பழங்கிணறாய்

புதைந்து

நெடுங்கிடையாய் ஆழ்வீழ்ந்து

கவிந்திருக்கிறேன்

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

கவிக் குரங்கு

முக்கினேன் முனகினேன்
முருகா!
முச்சந்தியில்
மூலைக்கு மூலை
முட்டி மோதினேன்
முருகா!
முட்டாளே முட்டாளே
மண்டையிலே மயிர்
மழித்த முட்டாளே
மூடமே
முடமே
முண்டமே
முக்குக்கு முக்கு
முகக்கிறுக்கு
மனக்கிறுக்கு
முறுகி
முனை!
முருகா!
முருகி
மனம் மருகி
முழங்கை மடக்கி
முஷ்டி மூடி
முடியல்லையே
கவி வல்லையே
முருகா முருகா!
கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

ஓராயிரம் சிறகுகள்

சிறகொன்று

காற்றில் தசாப்தங்களாய்

அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது

ஒற்றைச் சிறகொடு

இற்றைக்கு

பல்லாயிரம் ”சிறகொன்று”கள்

மொட்டைக் கவிதைகளோ

அவ்வொற்றைச் சிறகையே

இமைத்துக் கண்ணடித்துக்

கண்ணாடியில் சிலிர்ப்பன

சொல்லாத சேதிகள் கடந்து

சொல்லாத சேதிகள் கடந்து

சொன்ன சேதிகளும்

சொன்ன சேதிகளும்

சொன்ன சேதிகளும்

சொல்லொன்னா சேதிகளும்

சொல்லொன்னா சேதிகளும்

என

பல்லாயிரம் சிறகுகள்

காற்றில் அலைகின்றன

மொட்டைக் கவிதைகளோ

அவ்வொற்றைச் சிறகைக்

கண்ணடித்து

கண்ணாடியில்

சிலிர்த்து

சலிக்கின்றன

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

கசாப்புக் கடை

கோடரி கொண்டு கபாலம் பிளந்து

என்னை அவர்கள் கொல்லவில்லை.

புருவங்களுக்கிடையில் குண்டு துளைத்தும்

நான் இறக்கவில்லை.

வாள் கொண்டு கழுத்தையறுத்தும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

இதயத்தை ஊடுருவித் துளைத்தெடுத்த

வெடிச் சிதறலாலும் நான் இறக்கவில்லை.

காரக்கிரகமொன்றில் அடைத்து விஷவாயு செலுத்தியும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

குறுவாளால் குறி அறுபட்டும்

நான் இறக்கவில்லை.

கால்களுக்கிடையில் சூலாயுதம் திணித்தும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

பலகை ஒன்றின் மீது இலகுவாக

நெஞ்சு நிமிர்த்தி நின்றிருந்தேன்.

கரங்கள் பின்னே கட்டியிருக்க

முகமிழந்து

விழியகலத் திறந்திருக்க

கனத்த சுருக்கு

கழுத்தை இறுக்க

பலகை இழுபட

முண்டம் துடிதுடிக்க

ஐந்து நிமிடம் ஐம்பத்தைந்து நொடிகள்.

கவிதை, கவிதைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

எது

நீ

நான்

அது

இது

எது

ஏது

புது

புகு

பகு

நகு

மிகு

தகு

ஏகு

எரு

ஏறு

மிகு

வகு

திகு

திகு

தீ

நீ

நான்

அது

இது

எது

ஏது

.

.

.

12.11.2010

கவிதை, கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

இலக்கற்ற கணைகள்

சிதறி

ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கும்

பிறர் அம்புகளை சேகரிக்கிறேன்

தொடுத்து

புஜம் கொண்ட பலம்

மட்டுக்கும் இழுத்து

குறிபார்க்காமல் இலக்கில்லாமல்

வானில் எய்கிறேன்

கணைபட்டு வீழ்ந்தது

புறாவோ பருந்தோ

அதனலகில் சிக்கிக் கிடந்த

புழுவோ சர்ப்பமோ

களவாடிச் சென்ற காகமோ

அது உதிர்த்த அணிகலனோ

அறியேன் யானறியேன்.

05.12.2001 – இல் குறிப்பாகக் கிறுக்கி வைத்திருந்தது.

இன்று (18.10.12) செப்பனிட்டது.

கவிதை, கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »
%d bloggers like this: