என்னமோ நடக்குது!

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

கணக்குல நா வீக்; இப்படி நம்பரை கண்ட மேனிக்கு மாத்தி கேள்வி கேட்டா என்னத்த சொல்லுறது? ஒரு மண்ணும் புரியல போங்க …

முதல் ( … கடைசி … அடக் கொடுமையே) கேள்விக்கே எஸ்கேப்பான்னு சிரிக்கறவங்களுக்கு சீரியஸா ஒரு பதில்:

வாழ்வு என்பது வ்+ஆ(வா) + ஊழ்வு (அல்லது உழவு அல்லது இழவு) என்றே இச்சொல் தொடங்குவதால் இதை வ்வாழ்வு என்றே சொல்ல வேண்டும். வ்வாழ்வு என்பது இவ்வாழ்வு (உச்சரித்துப் பார்க்க). ஆக, இவ் + ஊழ்வு எனக் கொண்டால் ஊழ்வினையின் பயனே இவ்வாழ்வு. உழவு எனக் கொண்டால் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர். இழவு எனக் கொண்டால் என்ன எழவுடா இந்த வ்வாழ்வு எனக் கொள்ள இடமுண்டு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இளிச்சவாயன்னு பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எதையோ நினைச்சு எதையோ செய்யப் போக கடைசியில வம்புல மாட்டிக்கிட்டு உதார் விடுறதே வாடிக்கையாப் போச்சு. சரிடாப்பா இதுதான் உனக்குப் பொருத்தமான பேருன்னு (வினையானதொகை) வச்சுக்கிட்டது.

ஊறுகா மாதிரி (வினைத்தொகை) தொட்டுக்க ஒரு ஆளுன்னுட்டும் (வளர்மதி) வச்சிக்கிட்டது.

காரண இடுகுறிப்பெயர் (அப்படீன்னா என்னன்னு கேக்காதீங்க … சொல்லிட்டேன்) அப்படீங்கறதால ரொம்ப ரசிச்சு ரசிச்சு புளகாங்கிதம்தாம் போங்க.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ECR ரோட்டில் சுத்துமுத்தும் ஆள்வாசனை இல்லாத ஒரு பண்ணை வீடு. நீச்சல் குளம். குளக்கரையில ஃபாரீன் மதுப்புட்டிகள் (ஒன்னு ரெண்டு கவுந்திருக்கோனும்) குளத்துக்குள்ள பரந்த மிதவை ஒன்னு. குறைஞ்சது நாலு பெண்கள் (பெண்கள் மட்டும்). இப்படி இப்படி …

21.பிடித்த பருவ காலம் எது?

மழை பேஞ்சா ஜல்ப்பு புடிச்சுக்கும். மே மாசத்துல வெயிலடிக்கும். எப்படியா இருந்தாலும் மொட்ட மாடிக்கு போக முடியாது …

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

‘காமிராக்’ கண்ணன் எடுத்த “ஜம்பு” மாதிரி (பக்கத்து வூட்டுக்காரருங்கோ).

6.கடலில் குளிக்க பிடிக்குமா… அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஏஞ்சாமி மெட்ராசுல பொறந்து வளந்த ஆளிட்ட இப்படியெல்லாம் கேக்கலாமா?
காக்காக் குளியல விட்டா என்ன மண்ணாங்கட்டி தெரியும் என்ன மாதிரியான ஜென்மங்களுக்கு?

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

க்ளிக் … க்ளிக் … சிகரெட் பத்த லைட்டர் அழுத்தும் சத்தம் (எங்களாலயும் சவுண்டு எழுப்ப முடியுமில்ல).

மார்கழி மாசத்துல நடுராத்திரி இந்த நாயுங்க வுடற ஊள இருக்கே (கடுப்புதான்).

18.கண்ணாடி அணிபவரா?

+ – எந்தப் பிரச்சினையுமில்ல. பந்தாவுக்கு ரெண்டு வச்சிருக்கேன். 1000 ரூபாய்க்கு குறைச்சலா இதுவரைக்கும் வாங்குனதில்ல. ஒன்னு கூலிங் கிளாஸ். ஒரு தபா ஒரு நண்பன் “blind மாதிரி இருக்கடா”ன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அதப் போடறதில்ல (கம்மணாட்டிக்கு “ராஜ பார்வை” கமல் மாதிரி இருக்கடா மாப்புன்னு சொல்ல மனசு வரல்ல பாருங்க – வேற யார் புளிப்பு பேச்சாவது ஞாபகம் வந்துச்சுன்னா சிலேட்ட எச்ச துப்பி அழிச்சிடுங்க)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

எந்தப் பாதியக் கேக்குறீங்க? மேல் பாதியா கீழ் பாதியா? இடமா வலமா? (எது கெடச்சாலும் ஓகே).

14.பிடித்த மணம்?

இவ்ளோ ச்ச்ச்சுருக்கமா கேட்டுப்புட்டீங்க!!!

ஏஞ்சாமி திருவிளையாடல் படம் பாக்கல்லையான்னு கேக்குறேன்!

17. பிடித்த விளையாட்டு?

கில்லி. (கில்லியில “ரிங்க்” தெரியுமா? மாட்டுன ஆள ‘கஞ்சி’ காச்ச வக்குறது தெரியுமான்னேன்!)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இப்படி இத்தனை கேள்வி வுடாம கேக்குறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

“அம்மையும் அப்பனும்.” (சுற்றுலான்னா சுத்தி சுத்தி வர்றதுதானே?)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அய்யா சாமி … பல பேரோட சகவாசம் முடிஞ்சதுல ரொம்ப நிம்மதியா இருக்கேன். எதுக்கு இப்படி கோத்து விடப் பாக்குறீங்க?

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

எதாவது சொல்லித் தொலைக்கப் போறேன் … (“ஏன்னு கேக்க பொண்டாட்டி இல்லையாம் …” பழமொழிதான்).

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஒரு நாலு வருஷத்துக்கு முன்ன உங்க ஃபோன் நம்பரக் குடுத்துட்டு கேட்டிருந்தீங்கன்னா ராத்திரி 12 மணிக்கு மேல (சாத்தான) அனுபவிச்சிருப்பீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கேள்வியில் தெளிவில்லை. ஆணா பெண்ணா? ஆடா, மாடா, கழுதையா குதிரையா? (எப்பிடி!)

4.பிடித்த மதிய உணவு என்ன?

No way. Mostly “brunch”.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரே கேள்விய ரெண்டு தபா கேட்டா இன்னா பண்ணுறது?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஏமாந்ததெல்லாம் போதும் நைனா … எஸ்கேப்.

2.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

“என்னப் பாட்டுப் பாட
என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம்
பாட்டுக் கேக்கும் சந்தம்
நிக்காத ஓடு
இது சர்க்காரு ரோடு …
ஏய் … ஏய் … ”

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

No tops. பட்டாப் பட்டி இல்ல. ஆனா டிரவுசர் கலர் மப்புல சரியா சொல்லத் தோணல. சாரி.

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஜூது (Casino).

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சரியா ஞாபகமில்ல. ஒரு மூனு மாசத்துக்கு முன்ன, ஓவரா அடிச்சு ஒரு நண்பரிட்ட “மக்கா, என்ன எப்பிடிப்பா நல்லவன்னு கண்டுபுடிக்குறாங்க”ன்னு பெரிய ஒப்பாரி வச்சேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

“நான் பைத்தியமா – ஒரு விளக்கம்” (பதிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் காட்ட முடியாது).

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

“மாறும் என்ற சொல்லே மாறாதது” (தத்துவம் … தத்துவம் … டே … எப்பிடிடா நீ இப்பிடி?)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

வலிக்குது … கை (வேறு அர்த்தங்கள் கற்பித்துக் கொள்பவர்களுக்கு மறுப்பு எழுதும் நிலையில் இல்லை).

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

போதுஞ்சாமி … ஆள விடுங்க.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தெருமுக்கு (முட்டுச்சந்து) … தம்மடிக்க …

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கிறுக்கிட்டுப் போங்கடே (ஆசிஃப் அண்ணாச்சி மன்னிச்சிடுங்க) அப்படீன்னு விட்டுடுவேன்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

“அலிபாபாவும் சில ஊதுபத்திகளும்”. (டிடெக்டிவ் நாவல் – திருடன வுட்டுக்கொடுத்த கதை).

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

நறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் …

ஆட்டத்துல என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி கென் 🙂

எனது பதில்கள்:

1) வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு என்கிற நீட்ஷேவின் கூற்றை சராசரி வாசகனுக்கு எவ்வாறு விளக்குவீர்கள்?

ஒரு ‘சராசரி’ வாசகன் எனும்போது நீட்ஷேவின் மேற்சொன்ன கூற்றை இப்படி விளக்கத் தொடங்குவேன்: “அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது” – ன்னு சொல்லியிருக்காங்கப்பா, அதுனால நாமும் மகிழ்ச்சியோடவும் எத்தனை பேருக்கு முடியுதோ அத்தனை பேருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரக்கூடிய வகையில் நம்மோட வாழ்க்கைய அற்புதமா வாழுறதுக்கான வழியை தேர்வு செய்யனும் …

(வாசகரின் செறிவு கூடியதும், “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்று முன்மொழிந்த அதே நீட்ஷே “ஒரு பொருளை அழகானதாக அனுபவிப்பது என்பது அதை மோசமாக அனுபவிப்பதாகும்” என்றும் முன்மொழிந்திருக்கறான். இந்த “முரணை” நாம் எப்படி விளங்கிக் கொள்வது என்று கேள்வியெழுப்புவேன் …)

2) சிற்றிதழ் உலகின் கலகக்காரனாக வெளிப்படித்திக்கொண்டது உங்களின் தீவிர இலக்கிய நடவடிக்கைகளை நீர்த்துப்போகச்செய்து விட்டது என்கிற குற்றச்சாட்டை மறுப்பீர்களா?

முதலாவதாக, ஒரு ”கலகக்காரனாக” என்னை நானே எப்போதும் வரித்துக்கொண்டதில்லை. சிற்றிதழ் உலகத்திலும், சக அறிவாளர்களிடத்திலும் ஊறிக்கிடந்த அற்பத்தனங்களைக் கண்டு கோபத்தில் வெடித்த சில சந்தர்ப்பங்கள் விபத்துகளாக அரங்கேறி, அந்த முத்திரை என்மீது சுமத்தப்பட்டது என்பதே என் தரப்பு.

என்னுடன் பழகிய சக இலக்கிய நண்பர்களோ, அறிவாளர்களோ எனக்கும் சரி எனது தலைமுறைக்கும் சரி, வழிகாட்டிகளாக இருக்கத் தவறியபோது, எனது தேடல்கள் தீவிரமடைந்தன. இதில் அடைந்த தெளிவுகளை பதிவு செய்துமிருக்கிறேன். அடுத்த பதிவாக அதை மீள்பதிவு செய்யவும் இருக்கிறேன்.

அதன்பின் எனது கோபங்கள் தணிந்து ஆக்கப்பூர்வமான திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். சொல்லப்போனால் இந்தக் கட்டத்திற்குப் பிறகே எனது எழுத்துக்கள் மேலும் செறிவுகூடியிருப்பதாக நினைக்கிறேன். “பரமபதம்” நாடகத்தை சாட்சி என முன்மொழியலாமா?

3) பெரியார் – இயக்கவியலின் தோல்விகளுக்கு யார் காரணம்? இந்துத்துவ பாசிசம் வளர்கிறது துணைப்போகிறவர்கள் யார்? நீங்கள் போலி பெரியாரிஸ்ட் என்கிற குற்றச்சாட்டிற்கு பதில்??

அ) முதலாவதாக, ஒரு விளக்கம். பெரியாரிஸ்ட் என்று என்னை எங்கும் சொல்லிக் கொண்டதில்லை. எந்த இசத்திலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
பெரியார் மீது மிகப்பெரும் மதிப்புகள் உண்டு. பின் அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் அவரவர் பங்களிப்புகளுக்குரிய மரியாதைகள் உண்டு. ஆகையால், என்னை “போலி பெரியாரிஸ்ட்” என்று குற்றம்சாட்டுவதில் எந்தப் பொருளும் இல்லை (அப்படி யாரேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா என்ன?)

ஆ) முதலில், திராவிட இயக்கத்தின் பல சரடுகள் குறித்தோ, அச்சரடுகள் சமூகத்தில் விளைவித்துள்ள சாதகமான மாற்றங்கள் குறித்தோகூட நமக்கு சரியான ஒரு மதிப்பீடு இல்லை.

அடுத்து, பெரியார் இயக்கத்தின் தோல்விகளுக்கு பற்பல காரணங்கள் உண்டு. அவை குறித்த நிதானமான மதிப்பீடுகளும் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. (வலதுசாரி விமர்சனங்களே மிகுந்திருக்கின்றன). விரிவான ஒரு ஆய்வை முன்வைக்கும் நிலையில் தற்சமயம் எனது நிலை அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

எந்த ஒரு இயக்கமும் தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தலைமைப் பண்பாளர்களை (second – line leadership) உருவாக்குவதில் கவனமாக இருக்கவேண்டும். இந்த அம்சத்தில், திராவிட இயக்கத்தின், குறிப்பாக, தி. மு. க – வின் தோல்வியைக் கவனிக்கலாம்.

இ) இந்துத்துவ பாசிசம் வளர்வதற்கு இன்றைய நிலையில் துணையாக இருப்பவர்கள், சொல்லப் போனால் மிக வலுவான தூணாக இருப்பவர்கள், NRI இந்தியர்கள். குஜராத் அதற்கு ஒரு சான்று. கல்விசார் ஆய்வுப்புலத்தில் இப்போக்கிற்கு New Cosmopolitanism என்று பெயரிட்டு, இவர்களிடம் வலதுசாரி நோக்குகள் வலுவாக ஊன்றியிருப்பதற்கான காரணங்களை ஆய்வும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றது, பார்ப்பனர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அடுத்த படிநிலை வரிசையில் இருக்கும் ஆதிக்க சாதிகளும் இதற்குத் துணையாக நிற்கின்றன.

4) உங்களின் முதல் காதலி பற்றி மற்றும் தற்போதும் காதலிக்கிறீர்களா? ஒரு காதல் கவிதை சொல்லுங்கள்?

சிக்க வைக்கப் பாக்குறீங்களே கென் 🙂 (ஒரு டீம் சுத்தறதா கேள்விப்பட்டேன் … அதுக்குத் தல யாருன்னும் கேள்விப்பட்டேன் … அந்தத் தலய நோக்கித்தான் அடுத்த என் கேள்விகள்).

சரி சொல்லிடறேன் … சொல்லிடறேன் … ”பனியா கும்பலோடு கூட்டு சேர முயற்சித்த வளர்மதி ஒழிக” என்ற வரலாற்றுப் பழியை சுமக்க வேண்டியிருக்கும் … என்றாலும் சொல்லிவிடுகிறேன்.

என் முதல் காதல் … எங்கள் தெருவில் இருந்த ஒரு சேட்டுப் பெண் … ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பரஸ்பரப் பார்வைகள், குறுகுறுப்புகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது … அவளுக்காகவே ஹிந்தி படிக்கவும் தொடங்கினேன் … (ஹிந்தி வால்க!) மத்யமா என்று சொல்லப்படும் இரண்டாம் நிலைத் தேர்வில் இரண்டு பாடங்கள். முதல் பாடத்தேர்வு முடிந்து, உணவு இடைவேளையில் தனியாக இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் என்னைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு பேசுவதற்காக நெருங்கி வந்தாள். எனக்கு கைகால் உதறத் தொடங்கிவிட்டது. எடுத்தேன் பாருங்கள் ஓட்டம். அதற்குப் பின் அந்தப் பெண் என்னை சட்டை செய்வதே இல்லை. நான் பார்த்தால் ”சீ … ” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

சில மாதங்களுக்கு முன், அதே பெண் குண்டுக்கட்டாக, அதே குண்டு குண்டாக இரண்டு பிள்ளைகளோடு நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தபோது … அப்பாடி தப்பிச்சோம் சாமி என்றிருந்தது 🙂

அப்புறம் தற்சமயம் காதல் ஏதும் இல்லை 😦 யாரையாவது கைகாட்டி உதவி செய்யுங்களேன் 😉

காதல் கவிதை … இப்போதைய வலையுலக ட்ரெண்டுக்கு ஒத்துப்போகாதே!

சரி ஒரு காதல் கவிதை … போனஸாக ஒரு காமக் கவிதையும் … இரண்டும் இதுவரையில் எந்த இதழுக்கும் அனுப்பாமல் வைத்திருப்பவை (கவிதைகள்தானா என்பதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும்)

முதலில் காதல் …

நீ விரும்பாதபோதில்
நான் உனை நெருங்காமலிருப்பதும்
நான் விரும்பாதபோதில் …
மன்னிப்பாய் எனை
நீ தனித்திருக்க விரும்பும்போதில்
நானுனைத் தனித்திருக்கவிடுவதும்
(தவித்துத் தவங்கிடக்கிறேன்)
நான் தனித்திருக்க விரும்பும்போதில்
நீயெனை விடுத்திருப்பதும்
(துவங்கித் தீயிலுணர்கிறாய்)
காதலெனில்
நீயெனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்
நானுனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்
சேர்ந்துணரும் பொழுதெது?
காதலினும் அரிதாகிப்போன
இம்மழைப்பொழிதா?
(05.07.07)

இது காமக் கவிதை …

இதழ் பதித்து
முலை திருகி
விறைத்த காம்புகள் வருடி
தொப்புள் குழி துழாவி
சிலிர்த்த மயிர் நுகர்ந்து
அலையும் கரமும்
சுழலும் நாவும்
விடைத்த நாசியும் …
குவித்து தலைமயிர் பற்றி
இழுத்து அழுத்தி
இன்னும் இன்னும்
வேண்டும் நின் கரங்கள் …
கேட்கக் கேட்க
தீராமல் தருவேன்
அன்பே
நீ எனக்கு?
(08.08.03)

அப்பாடி … முடிஞ்சுதா … 🙂

********************************************

இப்போ அந்த ரகசியக் கூட்டத்தின் தல என்று கேள்விப்பட்ட … பைத்தியக்காரனுக்கு …

1) தமிழின் மிகச் சிறந்த நாவலாக ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோனி” யை பலரும் முன்மொழிந்திருப்பதை அறிவீர்கள். (பட்டியல்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு). உங்கள் கருத்து என்ன? ஆமோதிக்கிறீர்கள் என்றால் சற்று விளக்கமுடியுமா?

2) புதிய ஜனநாயகம் இயக்கத்தினரோடு சில காலம் செயல்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்திர்கள். உங்கள் அனுபவம் என்ன? அவர்களைப் பற்றிய தற்போதைய உங்களுடைய மதிப்பீடு என்ன?

3) ஜெயமோகன், சாரு, பிரமிளின் ஆவி மூவரும் சந்தித்துக் கொண்டார்களானால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

4) மறைக்காம ஒழுங்காச் சொல்லிடு … உன் வயசு என்ன?
(என்ன மாட்டிவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சுக்குவியா மாமு … )

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: