மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்…

இதனால் சகலமானவர்களுக்கும்

தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்…

மறைந்த

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்களின் நல்லாட்சி நடைபெற்றுவருகிறது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியின் பேரில்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

தூப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

பச்சிளம் சிறுமியின் வாயில் சுடப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

14 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

மூன்று நாட்கள் நரவேட்டை ஆடப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

இழப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

இயல்புநிலை திரும்பியது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் நல் விருந்து உண்டனர்

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் உறங்கினர்.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் கழித்தனர்.

மறைந்த

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்களின் நல்லாட்சி

நலமே நடைபெற்றுவருகிறது.

நன்றி: நக்கீரன்

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »
%d bloggers like this: